கத்திரிக்காய் சாதம்
Share
கத்திரிக்காய் சாதம்
கத்திரிக்காய் சாதம் செய்வது எப்படி
தேவையானவை:
அரிசி - ஒரு கப்,
கத்திரிக்காய் - 5 (மீடியம் சைஸ்),
வெங்காயம் - 3 (மீடியம் சைஸ்),
தனியா - ஒரு டீஸ்பூன்,
கடலைப்பருப்பு - 2 டீஸ்பூன்,
காய்ந்த மிளகாய் - 4,
பெருங்காயத்தூள் - கால் டீஸ்பூன்,
நறுக்கிய மல்லித்தழை - கால் கப்,
எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
Method
கத்திரிக்காய் சாதம் செய்முறை:
அரிசியை உதிரியாக வடித்து ஆறவிடவும்.
வெங்காயத்தையும், கத்திரிக்காயையும் நடுத்தரமாக நறுக்கவும்.
தனியா, கடலைப்பருப்பு, காய்ந்த மிளகாய், பெருங்காயத்தூள் சேர்த்து மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும்.
கடாயில் எண்ணெய் காய்ந்ததும், வெங்காயத்தை வதக்கி பிறகு கத்தரிக்காய் சேர்த்து வதக்கவும்.
அரைத்த பொடியை தூவி 2 நிமிடம் கிளறவும். பிறகு, ஆறவைத்துள்ள சாதத்தை சேர்த்து லேசாக கிளறி,
மல்லித்தழை தூவி பரிமாறவும்.
அருமையான சுவையில் கத்திரிக்காய் சாதம் ரெடி!
புளியோதரை சாதம் செய்வது எப்படி, பாசுமதி அரிசி - தக்காளி சாதம்
எலுமிச்சை சாதம் செய்வது எப்படி,தக்காளி சாதம் செய்வது எப்படி
Hits: 1889, Rating : ( 4 ) by 3 User(s).